கிருஷ்ணகிரி:ஓசூர் அடுத்த முதுகுறுக்கி கிராமத்தைச் சேர்ந்தவர் துர்கேஷ் (25) இவர் கூலி வேலை பார்த்து வந்ததாகச் சொல்லப்படுகிறது. துர்கேஷிக்கு 2017ஆம் ஆண்டு சோனியா என்கிற உறவுக்கார பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டு, தற்போது இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
துர்கேஷ் உடன் நண்பர்களாகச் சுற்றிவந்த பக்கத்து வீட்டுக்காரர் நட்ராஜ் (30) என்பவருக்கும் துர்கேஷ் மனைவி சோனியாவிற்கும் திருமணம் தாண்டிய உறவு, இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. துர்கேஷ்-க்கு இந்த விவகாரம் தெரியவர சில மாதங்களுக்கு முன்பு கர்நாடகா மாநிலத்தில் குடியிருக்கச் சென்றபோது சோனியாவை, நட்ராஜ் அழைத்துச் சென்றுவிட்டதாகப் பேரிகை காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
சில தினங்களுக்குப் பிறகு சோனியா பேரிகை காவல்நிலையத்திற்கு வந்தபோது பெரியோர்களால் பேசி முடித்து மீண்டும் முதுகுறுக்கியில் உள்ள தனது வீட்டிலேயே துர்கேஷ் மனைவி பிள்ளைகளுடன் இருந்து வந்துள்ளார். நட்ராஜ்-க்கு ஆதரவாக அதே பகுதியைச் சேர்ந்த மது என்பவரும் அவ்வப்போது துர்கேசை சீண்டி வந்ததாகக் கூறப்படுகிறது.