கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகேயுள்ள தேன்கனிகோட்டையில் காப்புக்காடு அமைந்துள்ளது. இன்று(ஏப்.8) இரண்டு வயதுடைய ஆண் புள்ளிமான் ஒன்று காப்புக்காட்டிலிருந்து வெளியேறி அருகேயுள்ள பெண்ணங்கூர் கிராமத்திற்குள் புகுந்துள்ளது.
எதிர்பாராதவிதமாக அந்த புள்ளிமான் முள்வேலி ஒன்றில் சிக்கியுள்ளது. இதனைக்கண்ட கிராமத்தினர் உடனடியாக தேன்கனிகோட்டை வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வனச்சரகர் சுகுமார், வனவர் ஈஸ்வரன் உள்ளிட்ட வனத்துறையினர் விரைந்து சென்று புள்ளிமானை மீட்டனர்.
இதனைத்தொடர்ந்து, அந்தப் புள்ளிமானை தேன்கனிகோட்டை வனச்சரகர் அலுவலகத்திற்கு கொண்டு சென்று, கால்நடை மருத்துவர் சங்கீதா தலைமையிலான மருத்துவக்குழுவினர் உதவியிடன் சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து, புள்ளிமானை பாதுகாப்பாக காப்புகாட்டில் விடுவதற்கான பணிகளையும் வனத்துறையினர் மேற்கொண்டனர்.
ஆனால், திடீரென புள்ளிமான் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது. இதனையடுத்து, வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் உயிரிழந்த புள்ளிமானை வனச்சரகர் அலுவலக வளாகத்தில் அடக்கம் செய்தனர்.
இதையும் படிங்க: வரதட்சணைக் கொடுமையால் மனைவி விஷம் குடித்து தற்கொலை