கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் சின்னமுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமணன் (55). அப்பகுதியில் எலக்ட்ரிக்கல் கடை வைத்துள்ள இவர் அங்கு பைனான்ஸ் தொழிலிலும் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் இவருக்கும் தருமபுரி மாவட்டம் பொம்ம அள்ளி பகுதியைச் சார்ந்த ரங்கநாதன் (30) என்பவருக்கும் நட்பு ஏற்பட்டுள்ளது.
தகாத உறவின் காரணமாக வாலிபர் கொன்று புதைப்பு - murder
கிருஷ்ணகிரி: திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவின் காரணமாக பைனான்சியர் கொலை செய்யப்பட்டு ஏரியில் புதைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரங்கநாதன் திருமணம் செய்யாமலேயே பெண் ஒருவரோடு காவேரிப்பட்டினம் பகுதியில் வீடு எடுத்துத் தங்கியுள்ளார். இந்நிலையில் லட்சுமணன் அடிக்கடி ரங்கநாதன் வீட்டுக்குச் செல்ல ரங்கநாதனின் காதலியோடு லட்சுமணனுக்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பலமுறை எச்சரித்தும் லட்சுமணன் ரங்கநாதனின் காதலியிடம் இருந்த உறவைத் துண்டிக்காமல் தொடர்ந்ததால் ஆத்திரமடைந்த ரங்கநாதன் லட்சுமணனை கொலை செய்து அருகே உள்ள முக்குளம் ஏரியில் புதைத்துள்ளார்.
10 நாட்களாக லட்சுமணன் தனது வீட்டுக்கு வராததால் சந்தேகமடைந்த ரங்கநாதனின் காதலி காவேரிப்பட்டினம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் ரங்கநாதன் காரிமங்கலம் காவல்நிலையத்தில் கொலை செய்ததை ஒப்புக் கொண்டு சரணடைந்துள்ளார். இதனைத் தொடர்ந்து புதைக்கப்பட்ட சடலத்தைத் தோண்டி எடுத்து பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.