கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பாஜக கட்சி அலுவலகத்தை பாஜக முன்னாள் தலைவர் இல.கணேசன் திறந்து வைத்தார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ”ஸ்டாலின் வேறு ஒரு மதக்கூட்டத்தில் பேசும்போது இந்துக்கள் என்றால் பற்றி எரிகிறது என்று பேசியிருக்கிறார். மக்கள் இதனை மறந்து விடமாட்டார்கள். ஸ்டாலின் தான் இந்துக்களுக்கு எதிரிகள் அல்ல என்று சொல்லியதை வரவேற்கிறேன்.
அவரது பேச்சால் மக்கள் ஏமாறமாட்டார்கள். பாஜக மற்றும் இந்து சார்ந்த அமைப்புகள் கொதித்தெழுந்து வருவதால் நான் இந்துக்களுக்கு எதிரி அல்ல என்று ஸ்டாலினை பேச வைத்திருக்கிறது. இதில் மகிழ்ச்சி. இனி ஆலயத்திற்கு சென்றால் பொது இடத்திற்கு என்று இருக்கக்கூடிய மரியாதையை கடைப்பிடிக்க வேண்டும்.