தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தூர்தர்ஷன் அஞ்சல் நிலையத்தை வானொலி அஞ்சல் நிலையமாக மாற்ற கோரிக்கை - கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியிலுள்ள தூர்தர்ஷன் அஞ்சல் நிலையத்தை வானொலி அஞ்சல் நிலையமாக மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தூர்தர்ஷன் அஞ்சல் நிலையம்
தூர்தர்ஷன் அஞ்சல் நிலையம்

By

Published : Oct 6, 2021, 8:19 PM IST

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பிரசார் பாரதியின் தொலைக்காட்சி அஞ்சல் நிலையம் செயல்பட்டு வருகிறது. நாடு முழுவதும் உள்ள தொலைக்காட்சி அஞ்சல் நிலையங்களை மூட பிரசார் பாரதி முடிவு செய்துள்ளது. அதன்படி இம்மாதம் 31ஆம் தேதி முதல் கிருஷ்ணகிரியிலுள்ள தொலைக்காட்சி அஞ்சல் நிலையம் மூடப்படுகிறது.

தரைவழி ஒளிபரப்பை மக்கள் தற்போது பார்ப்பது இல்லை, ஓடிடி, கேபிள் டிவி, டிடிஹெச் வழியாக நூற்றுக்கணக்கான சேனல்களை மக்கள் கண்டுகளிக்கின்றனர். தரை வழி தொலைக்காட்சி ஒளிபரப்பில் ஒரு சேனல் மட்டுமே கிடைத்து வருவதால் மக்கள் இச்சேவையை பயன்படுத்துவது இல்லை. இதன் காரணமாக தொலைக்காட்சி அஞ்சல் நிலையங்கள் நாடு முழுவதும் மூடப்படுகிறது.

வானொலி அஞ்சல் நிலையம்

திருப்பத்தூர், சேலம் மாவட்டம் ஏற்காடு தொலைக்காட்சி அஞ்சல் நிலையம் வானொலி அஞ்சல் நிலையமாக மாற்றி அங்கிருந்து பண்பலை வானொலி ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் வானொலி நிகழ்ச்சிகளை சுற்றுவட்டார பகுதி மக்கள் கேட்டு வருகின்றனர்.

இதனால், கிருஷ்ணகிரியிலுள்ள தொலைக்காட்சி அஞ்சல் நிலையத்தையும் பண்பலை வானொலி அஞ்சல் நிலையமாக மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வானொலி ஒலிபரப்புகள் இரைச்சலுடன் கேட்கிறது. பெங்களூரு பகுதியிலிருந்து கன்னட வானொலி நிகழ்ச்சிகளை மட்டுமே இப்பகுதியில் கேட்கமுடிகிறது தமிழ் வானொலி நிகழ்ச்சிகள் இப்பகுதிகளில் கிடைப்பது இல்லை என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

தர்மபுரியிலுள்ள அகில இந்திய வானொலி நிலையத்தின் ஒளிபரப்பை கிருஷ்ணகிரியிலுள்ள தொலைக்காட்சி அஞ்சல் நிலையத்தின் மூலம் பண்பலை வழியாக ஒளிபரப்பு செய்யும்போது இப்பகுதி மக்களுக்கு வானொலி ஒலிபரப்பு தெளிவாக கிடைக்கும். மேலும், கிருஷ்ணகிரி ஒலிபரப்பு செய்யும்போது ஓசூர் வரை மக்களுக்கு நிகழ்ச்சிகள் தெளிவாக சென்றடையும். இதன் காரணமாக தர்மபுரி அகில இந்திய வானொலிக்கு வர்த்தக ரீதியாகவும் விளம்பர வருவாய் அதிகரிக்கும்.

வானொலி நேயர்கள் கோரிக்கை

கிருஷ்ணகிரி மாவட்ட மக்களுக்கு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், அரசு மக்களுக்கு செயல்படுத்திவரும் திட்டங்கள், வேளாண் சார்ந்த நிகழ்ச்சிகள் போன்றவை சென்றடையும் வகையில் இருக்கும். தர்மபுரி அகில இந்திய வானொலி நிகழ்ச்சிகள் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களுக்காக நிகழ்ச்சிகளை தயார் செய்து ஒளிபரப்பி வருகிறது.

கிருஷ்ணகிரியில் தர்மபுரி அகில இந்திய வானொலியின் ஒளிபரப்பு கிடைக்கும் வகையில் பிரசார் பாரதி தொலைக்காட்சி அஞ்சல் நிலையத்தை வானொலி நிலையமாக மாற்ற வேண்டும் என பொதுமக்களும், வானொலி நேயர்களும் அரசுக்கு கோரிக்கை விடுக்கின்றனர்.

இதையும் படிங்க:'அரசு கேபிள் டி.வி மூலமாக ஓடிடி தளங்களை ஒளிபரப்படும்' - அரசு கேபிள் டிவி தலைவர்

ABOUT THE AUTHOR

...view details