கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த சூளகிரி, தேன்கனிக்கோட்டை, கெலமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் சூறாவளிக் காற்றுடன் பலத்த மழை பெய்தது. ஒரு மணிநேரத்திற்கு மேலாக தொடர்ந்து பெய்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மேலும், சூளகிரி பகுதியில் ஆலங்கட்டியுடன் மழை பெய்தது.
ஓசூர் சுற்றுவட்டார பகுதிகளில் ஆலங்கட்டி மழை: மக்கள் மகிழ்ச்சி! - கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி: ஓசூர் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த ஆலங்கட்டி மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ள நிலையில் விவசாயிகள் வருத்தம் அடைந்துள்ளனர்.
ஒசூர் சுற்றுவட்டார பகுதிகளில் திடீா் ஆலங்கட்டி மழை
கடந்த ஒரு மாத காலமாக வெயிலின் தாக்கத்தால் அவதிப்பட்ட பொதுமக்களுக்கு தற்போது பெய்த மழை மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆலங்கட்டி மழை மற்றும் சூறைகாற்று காரணமாக மாமரங்களில் உள்ள மாங்காய்கள் உதிர்ந்ததால் ஆலங்கட்டி மழையால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இதையும் படிங்க:’மேற்கு வங்கத்தை அடுத்து தமிழ்நாட்டு கலாச்சாரத்தை அழிக்கும் பாஜக’