கிருஷ்ணகிரி: பெங்களூரு - சென்னை தேசிய நெடுஞ்சாலை ஓசூர் பகுதிகளில், போக்குவரத்து நிறைந்த பகுதியாக இருந்து வருகிறது. இதில், ஏராளமான கல்வி நிறுவனங்கள், ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இந்த பகுதியில் ஆபத்தை உணராத சில இளைஞர்கள் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வீலிங் சாகசம் மேற்கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.
ஹைவேயில் வீலிங் செய்து அட்டகாசம் செய்த இளைஞர்கள் - வைரலாகும் வீடியோ! - chennai bangalore highway
ஓசூர் பகுதியில் இளைஞர்கள் தொடர்ந்து பைக் வீலிங் செய்து வரும் நிலையில் இது குறித்து காவல் துறையினர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Etv Bharat
சாலையில் சரியாக செல்லக்கூடிய வாகன ஓட்டிகளும், இதுபோன்ற பொறுப்பற்ற நபர்களால் விபத்திற்குள்ளாகும் நிலை ஏற்படுகிறது. எனவே வீலிங் செய்யும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து, இதுபோன்ற சம்பவங்களை தடுத்து நிறுத்த வாகன ஓட்டிகள் காவல்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:New year celebration: தமிழ்நாடு காவல்துறை விதித்துள்ள கட்டுப்பாடுகள் என்ன?