தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெங்களூரு பயணிகள் சிரமம்.. ஓசூரில் பேருந்துகளில் முண்டியடித்துச் செல்லும் அவலம்!

TN Bus Strike: ஓசூர் பணிமனையில் இருந்து பெங்களூருக்கு குறைந்த அளவிலே பேருந்துகள் இயக்கப்படுவதால், பயணிகள் முண்டியடித்துக் கொண்டு பயணம் செய்யும் அவலம் ஏற்பட்டுள்ளது.

TN Bus Strike
ஓசூரில் பேருந்துகளின் இயக்கம் குறைவு

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 9, 2024, 12:13 PM IST

ஓசூரில் பேருந்துகளின் இயக்கம் குறைவு

கிருஷ்ணகிரி:தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பவும், கழகங்களின் வரவு செலவுக்குமான வித்தியாசத் தொகையை அரசு பட்டியலில் ஒதுக்க வேண்டும் எனவும், ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதியத் திட்டம், அகவிலைப்படி உயர்வு போன்ற 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்று முதல் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருந்தனர்.

அதனைத் தொடர்ந்து, நேற்று இரவு முதலே பல்வேறு பணிமனையில் போராட்டம் துவங்கி நடந்து வருகிறது. மேலும் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு, பல்வேறு தொழிலாளர்கள் பணிக்கு வந்துள்ளனர். ஆனால் வழக்கமாக செயல்படும் பேருந்தின் அளவில் குறைந்த அளவு பேருந்தே செயல்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள போக்குவரத்து பணிமனையில் நகரப் பேருந்து பிரிவில் 550 பேரும், புறநகரப் பேருந்து பிரிவில் ஓட்டுநர், நடத்துநர், மெக்கானிக் உள்ளிட்ட 450 பேரும் என மொத்தம் 1,000 பேர் பணியாற்றி வருகின்றனர்.

தற்போது தமிழ்நாடு முழுவதும் போக்குவரத்து தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்த போராட்ட அறிவிப்பைத் தொடர்ந்து, ஓசூரை பொறுத்தவரை அண்ணா தொழிற்சங்கம் உள்ளிட்ட ஓரிரு தொழிற்சங்கங்ளை தவிர்த்து 850 பேர் பணிக்கு திரும்பியுள்ளனர். ஆகையால், ஓசூரிலிருந்து பிற பகுதிகளுக்குச் செல்லும் பேருந்துகள், கிட்டத்தட்ட 85 சதவீதம் இயக்கப்படுவதால் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகாமல் போக்குவரத்து சேவை தொடர்கிறது.

ஆனால், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வழியாக பெங்களூருக்கு தமிழக அரசு பேருந்துகள் குறைந்த அளவிலேயே இயக்கப்பட்டு வருகிறது. அதேநேரம், கர்நாடக மாநில அரசு பேருந்துகள் மற்றும் தமிழக தனியார் பேருந்துகளில் பயணிகள் அதிக அளவில் உள்ளனர்.

மேலும் குறைந்த அளவு பேருந்து இயக்கத்தால், கூட்ட நெரிசலில் முண்டியடித்துக் கொண்டு பெங்களூருக்கு பொதுமக்கள் பயணித்து வருகின்றனர். மேலும், ஓசூர் அடுத்த தேன்கனிக்கோட்டை பணிமனையிலிருந்து 44 நகரப் பேருந்துகள் இயக்கப்படுவதால் எவ்வித பாதிப்பும் இல்லை என கூறப்படுகிறது.

இதையும் படிங்க: சென்னையில் மாநகர் பேருந்துகள் முழுமையாக இயக்கம் - எம்டிசி மேலாண் இயக்குநர் தகவல்!

ABOUT THE AUTHOR

...view details