தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஒசூரில் ரிங்ரோடு அமைப்பது குறித்தான கருத்துக்கேட்புக் கூட்டம் ! - Opinion meeting held on hosur about satellite ring road

கிருஷ்ணகிரி: தமிழ்நாடு கர்நாடக மாநிலத்தை இணைக்கும் வகையில் அமைய உள்ள சேட்டிலைட் ரிங்ரோடு குறித்து பொதுமக்களின் கருத்துக்கேட்புக் கூட்டம் ஒசூரில் நடைபெற்றது.

Opinion meeting held on hosur about satellite ring road

By

Published : Sep 24, 2019, 11:19 PM IST

ஒசூரில் பெருகி வரும் வாகனங்களால் ஏற்படும் போக்குவரத்து இடையூறுகளை குறைக்கும் வகையில் சாலைகள் போட தேசிய நெடுஞ்சாலைத் துறை திட்டமிட்டுள்ளது.

அதன்படி, மதகொண்டப்பள்ளி முதல் தேவீரபள்ளி வரை தேசிய நெடுஞ்சாலை 948 A என்கிற பெயரில் சாட்டிலைட் டவுண் ரிங்ரோடு அமைக்கப்படவுள்ளது. இச்சாலை கிராமங்கள் வழியாக தமிழ்நாடு-கரநாடக மாநிலங்களை இணைக்கும் வகையில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதற்கான பொதுமக்களிடம் கருத்துக்கேட்பு கூட்டம்,கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் பிரபாகரன் தலைமையில் ஓசூரை அடுத்த மத்திகிரி கால்நடைப்பண்ணை வளாகத்தில் நடைபெற்றது.

கருத்துக்கேட்புக் கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள்

இதில் பங்கேற்ற விவசாயிகளில் சிலர், தங்களின் வாழ்வாதாரமான விளைநிலங்கள் பாதிக்கப்படுவதால்,மாற்றுப்பகுதியில் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்றும் சாலை அமைப்பதற்காக கையகப்படுத்தும் நிலத்திற்கு உரிய விலை நிர்ணயம் செய்யவேண்டுமென்றும் கருத்து தெரிவித்தனர்.

பொதுமக்கள் விவசாயிகளின் கருத்துகளை முழுமையாக கேட்டறிந்த மாவட்ட ஆட்சியர்,விவசாயிகளின் நிலத்திற்கு இரண்டு மடங்காக விலை நிர்ணயம் செய்வதாகவும் இடிக்கும் கட்டிடங்களுக்கு உரிய இழப்பீடு தரப்படும் என்றும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஏரியில் முழ்கி அண்ணன்-தம்பி பலி - மணல் குழி உயிரை காவு வாங்கிய பரிதாபம்

ABOUT THE AUTHOR

...view details