தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இ-பாஸ் உள்ள வாகனங்கள் மட்டுமே அனுமதி - Tamilnadu-Karnataka border

கிருஷ்ணகிரி: தமிழ்நாட்டில் அறிவிக்கப்பட்ட கூடுதல் தளர்வுகளால் ஜூஜூவாடி சோதனை சாவடியில் இ-பாஸ் உள்ள வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன.

தமிழகத்தில் அறிவிக்கப்பட்ட கூடுதல் தளர்வுகளால், கர்நாடக மாநிலத்திலிருந்து தமிழகம் வரும் வாகனங்கள் அதிகரிப்பு  ஜூஜூவாடி சோதனை சாவடியில் இ-பாஸ் உள்ள வாகனங்கள் மட்டுமே அனுமதி
தமிழகத்தில் அறிவிக்கப்பட்ட கூடுதல் தளர்வுகளால், கர்நாடக மாநிலத்திலிருந்து தமிழகம் வரும் வாகனங்கள் அதிகரிப்பு ஜூஜூவாடி சோதனை சாவடியில் இ-பாஸ் உள்ள வாகனங்கள் மட்டுமே அனுமதி

By

Published : Jun 15, 2021, 12:55 AM IST

தமிழ்நாட்டு ஊரடங்கில் புதிய தளர்வுகளால் கர்நாடக மாநிலத்திலிருந்து தமிழ்நாடு திரும்பும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இ-பதிவு

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த தமிழ்நாடு மாநில எல்லையான ஜூஜூவாடி சோதனை சாவடியில் தமிழ்நாடு வரும் கர்நாடக வாகனங்களை காவலர்கள், வருவாய் அலுவலர்கள், சுகாதாரப் பணியாளர்கள் பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர். அத்தியாவசிய வாகனங்களை தவிர்த்து, மற்ற வாகனங்கள் இ-பதிவு செய்திருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன.

இ-பதிவு இல்லாத வாகனங்களை அலுவலர்கள் திருப்பி அனுப்பி வைக்கப்படுகின்றனர். தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் டாஸ்மாக் திறக்க அனுமதி மறுக்கப்பட்டதால், சிலர் கர்நாடக மாநில மதுபாட்டில்களை கடத்த வாய்ப்பிருப்பதால், மதுவிலக்கு அமல் பிரிவு காவலர்கள் வாகனங்களை சோதனையிட்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details