கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் இன்று (பிப். 01) நின்றுகொண்டிருந்த அரசுப் பேருந்தின் மீது ஈரோடு மாவட்டம் பவானியிலிருந்து வந்த ஆம்னி வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அருகே திம்மாபுரம் என்னுமிடத்தில் இன்று அதிகாலையில் தனியார் உணவகம் அருகே சேலத்திலிருந்து பெங்களூரு நோக்கி வந்துகொண்டிருந்த அரசுப் பேருந்து நின்றுகொண்டிருந்தது.
ஈரோட்டிலிருந்து கிருஷ்ணகிரி நோக்கி பெங்களூரு சுற்றுலா சென்ற கார், நின்றுகொண்டிருந்த பேருந்தின் பின்பகுதியில் மோதி விபத்து ஏற்பட்டது. விபத்தில் காரில் பயணம்செய்த ஈரோடு மாவட்டம் பவானியைச் சேர்ந்த பிரசாந்த், லிங்கா, சுரேந்தர், சிவக்குமார், ஓட்டுநர் ஆகிய 5 ஆண்கள் உயிரிழந்தனர்.