கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரு அடுத்த பாகலூர் பகுதியைச் சேர்ந்தவர் ஷாப் சான் (70). இவர் பாகலூர் காவல் நிலையத்திற்கு அருகில் வசித்து வந்தார். இதற்கிடையில் நேற்றிரவு (நவ. 16) அவரை அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் கத்தியால் குத்தியதில் படுகாயத்துடன் உயிருக்கு போராடி கிடந்துள்ளார்.
பாகலூர் காவல் நிலையம் அருகே முதியவர் குத்தி படுகொலை! - old man murder
கிருஷ்ணகிரி: ஓசூரு அடுத்த பாகலூர் காவல் நிலையம் அருகே முதியவர் குத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முதியவர்
இதனையறிந்த அருகில் இருப்பவர்கள் அவரை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இருப்பினும் ஷாப் ஜான் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து காவல்துறையினர் ஷாப் ஜான் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக ஓசூரு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொலைக்கான காரணம் குறித்தும், கொலையாளி யார் என்பது குறித்தும் பாகலூர் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.