தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இளைஞர் கழுத்தறுத்துக் கொலை: முட்புதரில் உடல் வீச்சு - north indian young man murderd

கிருஷ்ணகிரி: ஒசூர் அருகே வடமாநில இளைஞர் ஒருவரின் கழுத்தை அறுத்துக் கொலைசெய்து முட்புதரில் வீசிச்சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

By

Published : Feb 12, 2020, 4:10 PM IST

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரை அடுத்த கர்ணூர் எனுமிடத்தில் இளைஞர் ஒருவரின் சடலம் கிடப்பதாக மத்திகிரி காவல் துறையினருக்கு அப்பகுதி மக்கள் தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல் துறையினர், இளைஞரின் உடலை மீட்டனர். அந்த இளைஞரின் கழுத்தை அறுத்துக் கொலைசெய்துவிட்டுப் பின் முட்புதரில் வீசப்பட்டிருந்தது தெரியவந்தது.

கழுத்தறுத்துக் கொலைசெய்து முட்புதரில் இளைஞரின் உடல் வீச்சு

மேலும் அவர் வடமாநில இளைஞர் என்பதும் தெரியவந்தது. உடலை மீட்ட காவல் துறையினர், உடற்கூறாய்வுக்காக ஒசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், வடமாநில இளைஞர்களுக்குள் ஏற்பட்ட பிரச்னை காரணமாக கொலை நடைபெற்றதா அல்லது வேறு பகுதியில் கொலைசெய்துவிட்டு உடலை இங்கு வீசிச் சென்றனரா உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க:சுவர் இடிந்து விழுந்ததில் சிறுமி மரணம்!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details