கிருஷ்ணகிரி மாவட்ட மக்களவைத் தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பாக காவேரிப்பட்டினம் பூங்காவனம் முனுசாமி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இதனையடுத்து, இன்றுமாவட்ட ஆட்சியரிடம் தனது வேட்பு மனுவை ஆதரவாளர்களுடன் வந்து தாக்கல் செய்தார்.
கிருஷ்ணகிரி: வேட்புமனு தாக்கல் செய்த கே.பி.முனுசாமி! - கே.பி.முனுசாமி
கிருஷ்ணகிரி : நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை, கிருஷ்ணகிரி அதிமுக வேட்பாளர் கே.பி முனுசாமி மாவட்ட ஆட்சியரிடம் இன்று தாக்கல் செய்தார்.
வேட்புமனு தாக்கல் செய்வதற்கு 100 மீட்டரில் இருந்து வேட்புமனு தாக்கல் செய்யும் இடம் வரையில் எந்தவித வாகனங்களும் அனுமதிக்கப்படாததால், கே.பி.முனுசாமி, தன்னுடன் அனுமதிக்கப்பட்ட 5 ஆதரவாளர்களுடன் நடந்து வந்து வேட்பு மனுவை தாக்கல் செய்தார். மேலும், மாவட்டச் செயலாளர் அசோக்குமார் உடன் வந்து துணை மனுவை சேர்ந்து தாக்கல் செய்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முனுசாமி, ஆதரவாளர்கள் மற்றும் கூட்டணியின் தோழமை கட்சிகயினருடன் சேர்ந்து வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளேன். கட்சி தொண்டர்கள் அனைவரும் எங்களுக்கு ஆதரவளித்து அமோக வெற்றி பெறச் செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.