தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'கோழி இறைச்சி உண்பதால் பாதிப்பு இல்லை' - திமுக சார்பில் விழிப்புணர்வு - கோழிகளை வழங்கி விழிப்புணர்வு

கிருஷ்ணகிரி: கோழி இறைச்சியை உண்பதால், எந்தப் பாதிப்பும் இல்லை என்பதை வலியுறுத்தி, திமுக வர்த்தக அணி சார்பில் பொதுமக்களுக்கு உயிருடன் உள்ள கோழிகளை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

திமுக சார்பில் உயிருடன் உள்ள கோழிகளை வழங்கி விழிப்புணர்வு
திமுக சார்பில் உயிருடன் உள்ள கோழிகளை வழங்கி விழிப்புணர்வு

By

Published : Apr 26, 2020, 1:43 PM IST

நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள கரோனா பெருந்தொற்று தாக்குதலில், கோழி இறைச்சியை உண்பதினால் கரோனா பெருந்தொற்று பரவும் அபாயம் ஏற்படும் என்ற அவநம்பிக்கையால், தமிழ்நாட்டில் வளர்க்கப்படும் கோழி இறைச்சிகள், தற்போது விற்பனையாகாமல் கடும் சரிவை சந்தித்துள்ளன.

மேலும் மக்கள் கோழி இறைச்சியை உண்பதால் நோய்த்தொற்று ஏற்படும் என யாரும் கோழி இறைச்சியை வாங்குவதில்லை. இதனால் பல கோடி ரூபாய் அளவில் நஷ்டம் ஏற்பட்டதோடு, ஆயிரக்கணக்கானவர்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர்.

இதனால் கோழியை வைத்து தொழில் செய்பவர்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் வகையில், கிருஷ்ணகிரி வர்த்தக அணியின் மாவட்ட அமைப்பாளர் பழனி ஏற்பாட்டில், திமுக பொறுப்பாளரும் சட்டமன்ற உறுப்பினர் செங்குட்டுவன் தலைமையில் 500-க்கும் மேற்பட்டோருக்கு உயிருடன் உள்ள ஒரு கோழியை, பொது மக்களுக்கு வழங்கி மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

உயிருடன் உள்ள கோழிகளை வழங்கி, விழிப்புணர்வு ஏற்படுத்தும் திமுக
இந்நிகழ்ச்சியில் மாநில விவசாய அணி துணை அமைப்பாளர் வெங்கடேசன், கிழக்கு ஒன்றியச்செயலாளர் கோவிந்தன், நாராயணமூர்த்தி, திருமலை செல்வன், அவைத்தலைவர் தர்மன், வேலுமணி, வாழை ரவி, ராஜா என்கிற ஆரோக்கியசாமி, துரை ஷாஜகான், சரவணன், ஸ்ரீராம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க:காற்றில் பறந்த சமூக இடைவெளி! பொருள்கள் வாங்க குவிந்த மக்கள்!

ABOUT THE AUTHOR

...view details