தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

புத்தாண்டு கொண்டாட்டம்: ஆஞ்சநேயர் கோயிலில் கடலைக்காய் திருவிழா - ஓசூரில் பழமை வாய்ந்த ஆஞ்சநேயர் கோவில்

ஓசூரில் புத்தாண்டை முன்னிட்டு பழமைவாய்ந்த ஆஞ்சநேயர் கோயிலில் கடலைக்காய் திருவிழா நடைபெற்றது. நாடு நலம்பெற வேண்டியும், விவசாயம் செழிக்க வேண்டியும் ஆஞ்சநேயர் மீது கடலைக்காய்களை வீசி பொதுமக்கள் வழிபாடு செய்தனர்.

புத்தாண்டு கொண்டாட்டம்:ஆஞ்சநேயர் கோவிலில் கடலைக்காய் திருவிழா
புத்தாண்டு கொண்டாட்டம்:ஆஞ்சநேயர் கோவிலில் கடலைக்காய் திருவிழா

By

Published : Jan 1, 2023, 5:31 PM IST

புத்தாண்டு கொண்டாட்டம்: ஆஞ்சநேயர் கோயிலில் கடலைக்காய் திருவிழா

கிருஷ்ணகிரி:ஓசூர் ராஜகணபதி நகர் பகுதியில் பழமையான ஸ்ரீவரசித்தி ஆஞ்சநேயர் சுவாமி கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு பிறந்த தினத்தில் கடலைக்காய் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கமாக உள்ளது.

அதேபோல இந்த 2023ஆம் ஆண்டு புத்தாண்டை முன்னிட்டு இன்று ஸ்ரீராஜ கணபதி ஸ்ரீவரசித்தி ஆஞ்சநேயர் சுவாமி கோயிலில் 65ஆம் ஆண்டு கடலைக்காய் திருவிழா நடைபெற்றது. இதனையொட்டி கோயிலில் காலை முதல் ஆஞ்சநேயருக்கு பல்வேறு சிறப்பு ஹோமங்கள் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரங்கள், சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டன. அப்போது ஆஞ்சநேயர் சுவாமி வெள்ளிகாப்பில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

அதனைத்தொடர்ந்து குவியலாக வைக்கப்பட்ட கடலைக்காய்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பக்தர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது. தொடர்ந்து பக்தர்கள் அனைவரும் நாடு நலம்பெற வேண்டும், விவசாயம் செழிக்க வேண்டும், அனைத்து மக்களும் இன்புற்று வாழ வேண்டும் எனவும் வேண்டி ஆஞ்சநேயர் சுவாமி மீதும் கோயில் சந்நிதி மீதும் கடலைக்காய்களை வீசி வழிபாடுகளை மேற்கொண்டனர்.

இந்த கடலைக்காய் திருவிழாவில் புத்தாண்டையொட்டி ஓசூர் பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டு சென்றனர்.

இதையும் படிங்க:NEW YEAR 2023: சுருளி அருவியில் குளித்து புத்தாண்டை கொண்டாடிய மக்கள்

ABOUT THE AUTHOR

...view details