கிருஷ்ணகிரி மாவட்ட, உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் "இந்திய நுகர்வோருக்கு ஒரு திருப்புமுனை” என்ற தலைப்பில் தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தினவிழா நேற்று நடைபெற்றது.
இந்த விழாவில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் வரவேற்புரை ஆற்றினார். மாவட்ட வருவாய் அலுவலர் உரையாற்றும் போது, "நுகர்வோருக்கு உரிமை உண்டு என்று தெரிந்து கொண்டு பொருட்கள் வாங்கும்போது தரமான பொருட்களா என சரிபார்த்து வாங்க வேண்டும். பொருட்களை வாங்கியதற்கான ரசீதுகள் கேட்டுப் பெறவேண்டும். பள்ளி மாணவ, மாணவியர்கள் பொருட்கள் வாங்கும் போது காலாவதியான பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா எனப் பார்த்து வாங்க வேண்டும்.