தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கிருஷ்ணகிரியில் கொலை - திருமணம் மீறிய உறவால் வந்த வினையா என சந்தேகம்? - Murder in krishnagiri

இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்ட திருப்பதிக்கு, பாஞ்சாலியூர் அருகே உள்ள பூசாரிப்பட்டியைச் சேர்ந்த மற்றொரு நபரின் மனைவியுடன் திருமணம் மீறிய உறவு இருந்தது தெரியவந்தது.

illegal affair
illegal affair

By

Published : Jan 10, 2021, 10:13 PM IST

கிருஷ்ணகிரி: எலக்ட்ரீசியன் ஒருவர் கொலை செய்யப்படதற்கு திருமணம் மீறிய உறவு காரணமாக இருக்குமோ என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

கிருஷ்ணகிரி அருகே உள்ள கொண்டேப்பள்ளியைச் சேர்ந்தவர் திருப்பதி. எலக்ட்ரீசியனாக பணிபுரியும் இவர், பணிக்கு செல்வதாக வீட்டில் இருந்து வெளியே சென்றார். இரவு நேரம் ஆகியும் வீடு திரும்பாத அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில், இன்று (ஜன.10) மாலை திருப்பதி ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள், பாஞ்சாலியூர் அருகே செங்கல் சூளை பக்கமாக இருந்ததை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து கிருஷ்ணகிரி தாலுகா காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தியதில், திருப்பதி தலையில் பெரிய கல் தூக்கி போடப்பட்ட நிலையில் முட்புதரில் கொலையுண்டு கிடந்தார். இதைத் தொடர்ந்து போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக கிருஷ்ணகிரி அரசு தலைமைமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்ட திருப்பதிக்கு, பாஞ்சாலியூர் அருகே உள்ள பூசாரிப்பட்டியைச் சேர்ந்த மற்றொரு நபரின் மனைவியுடன் திருமணம் மீறிய உறவு இருந்தது தெரியவந்தது. இதை அறிந்த அந்த பெண்ணின் கணவர் திருப்பதியை கண்டித்துள்ளார். ஆனாலும், திருப்பதி தன் உறவை தொடர்ந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண்ணின் கணவர், திருப்பதியை கொலை செய்திருக்கலாம் என போலீசாரின் விசாரணையில் சந்தேகிக்கப்படுகிறது. இந்த கொலை சம்பவம் கிருஷ்ணகிரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ABOUT THE AUTHOR

...view details