கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரிலிருந்து திருப்பத்தூருக்கு அரசுப் பேருந்து ஒன்று வந்துகொண்டிருந்தது. அப்போது, பர்கூர் நோக்கி மூன்று பேர் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தனர்.
அரசுப் பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து - 3 பேர் உயிரிழப்பு - Krishnagiri
கிருஷ்ணகிரி: முன்னால் சென்ற பேருந்தை முந்திச் செல்ல முயன்ற போது எதிரே வந்த அரசுப் பேருந்து மீது மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற மூன்று பேர் உயிரிழந்தனர்.
![அரசுப் பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து - 3 பேர் உயிரிழப்பு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-4455953-thumbnail-3x2-accident.jpg)
motorcycle-crashes-into-government-bus-3-killed-near-krishnagiri
அப்போது, இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் முன்னால் சென்ற பேருந்தை முந்திச் செல்ல முயன்ற போது, எதிரே வந்த அரசுப் பேருந்து மீது மோதி தூக்கி வீசப்பட்டனர். இதில் சம்பவ இடத்திலேயே மூவரும் உயிரிழந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் இறந்தவர்களின் உடல்களைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.