கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள கொடகரை மலைக்கிராமத்தில் கணவர் பசுவராஜ் உடன் வசித்து வருபவர் நாகம்மா. இவருக்கு பிரேம்குமார்(3) என்ற ஆண்குழந்தையும், பிரியம்மா(7) என்ற பெண் குழந்தையும் உள்ளன.
தற்கொலை செய்துகொண்ட நாகம்மா மற்றும் குழந்தகளின் சடலங்கள் இந்நிலையில், நாகம்மா தனது இரண்டு குழந்தைகளையும் கிணற்றில் வீசி கொன்றுவிட்டு, தானும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். இதை அவ்வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.
தகவலையடுத்து காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இதனைத் தொடர்ந்து, கிணற்றில் வீசப்பட்டு உயிரிழந்த குழந்தைகள், தாய் நாகம்மா ஆகியோரின் சடலங்கள் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டு உடற்கூறாய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
குழந்தைகளைக் கொன்று தாயும் தற்கொலை செய்துகொண்ட சோகம் இதுகுறித்து காவல் துறையினர் நாகம்மாவின் கணவர் பசுவராஜ் குடும்பத்தினரிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறது. முதற்கட்ட விசாரணையில் அந்த பெண் குடும்பத் தகராறு காரணமாக தற்கொலை செய்துகொண்டதாகத் தெரிகிறது என தெரிய வந்துள்ளது. மேலும் இரண்டு குழந்தைகளை கிணற்றில் வீசி, தாயும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: மனைவி இறந்த துக்கம் தாளாமல் கணவன் கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சி