ஓசூர் ரயில் நிலையம் அருகே பெங்களூரிலிருந்து தேன்கனிக்கோட்டை செல்லும் பாதையில் ரயில்வே மேம்பாலம் அருகில் இன்று அதிகாலை 10 மாத கைக்குழந்தையுடன் பெண் ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதைப் பார்த்த மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் டிரைவர் உடனடியாக ஓசூர் ரயில்வே காவல்துறைக்குத் தகவல் அளித்துள்ளார்.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த காவலர்கள், தலை, கை ,கால்கள் சிதறிய நிலையில் இருந்த பெண்ணின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இருந்தது தெரிய வந்தது. அதே சமயம், நல்வாய்ப்பாக ரயில்வே பாதையில் 10 வயது பெண் குழந்தை உயிருடன் இருப்பதைப் பார்த்து காவல்துறையினர் குழந்தையை மீட்டெடுத்தனர்.