கிருஷ்ணகிரியில் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் மாதாந்திர ஓய்வூதியம், வீட்டு மனை பட்டா உள்ளிட்டவை வழங்கக்கோரி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும் வெங்காயம், சமையல் எண்ணெய் விலை உயர்வை குறைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
மாதாந்திர ஓய்வூதியம், வீட்டு மனை பட்டா வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம் - வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணகிரி: ஊத்தங்கரை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
![மாதாந்திர ஓய்வூதியம், வீட்டு மனை பட்டா வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-4721900-thumbnail-3x2-krimanu.jpg)
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
இதில் கலந்து கொண்ட நிர்வாகிகள் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து வட்டாட்சியர் மனுக்களை பெற்றுக்கொண்டு உடனடி தீர்வு அளிக்கப்படும் என உறுதியளித்ததையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
இதையும் படிங்க: ஆத்தா நான் நீச்சல் அடிக்க கத்துக்கிட்டேன்... அனுபம் கேர் வெளியிட்ட நீச்சல் வீடியோ!