தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கிருஷ்ணகிரி: கூட்டுறவு வங்கியில் ரூ. 25 கோடி பணமோசடி?

கிருஷ்ணகிரி: மாவட்டத்தில் இயங்கிவரும் 120க்கும் மேற்பட்ட தொடக்க வேளாண்மை கூட்டறவு சங்கங்களில் 11 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் மட்டும் ரூ. 25 கோடி பணமோசடி நடந்துள்ளதாக கிருஷ்ணகிரி சட்டப்பேரவை உறுப்பினர் செங்குட்டுவன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டச் செய்திகள்  கிருஷ்ணகிரி சட்டப்பேரவை உறுப்பினர்  எம்எல்ஏ செங்குட்டுவன்  krishnagiri mla  cooperative bank scam  krishnagiri co operative scam
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கூட்டுறவு வங்கியில் ரூ. 25 கோடி பணமோசடி?

By

Published : Aug 14, 2020, 4:26 PM IST

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 120க்கும் மேற்பட்ட தொடக்க வேளாண்மை கூட்டறவு சங்கங்கள் மாநில கூட்டுறவுத் துறையின் கீழ் இயங்கிவருகின்றன. இதில், 11 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் மட்டும் 25 கோடி ரூபாய் அளவுக்கு பணமோசடி நடைபெற்றுள்ளதாக கிருஷ்ணகிரி சட்டப்பேரவை உறுப்பினர் மற்றும் திமுகவின் கிழக்கு மாவட்டச் செயலாளர் செங்குட்டுவன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், "கூட்டுறவு வங்கிகளில் பெரும்பாலும் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்களே தலைவராக உள்ளனர். இதனால், பணமோசடி தொடர்பாக அரசு அலுவலர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர். பொங்கல் பொருட்கள் வாங்க ஒதுக்கப்பட்ட இரண்டு கோடி ரூபாயில் 60 லட்சம் ரூபாய் வரை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி சட்டப்பேரவை உறுப்பினர் செங்குட்டுவன் பேட்டி

கூட்டுறவுத் துறையில் பல்வேறு வகையான பணிகள் நியமனத்தில் இரண்டரை கோடி ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. வெளி மாவட்டத்தைச் சேர்ந்த கூட்டுறவுத் தணிக்கையாளர்களைக் கொண்டு கிருஷ்ணகிரியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களின் கணக்குகளை உடனடியாக தணிக்கை செய்யவேண்டும்" என்றார்.

மேலும், உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால், பணமோசடி குறித்து துண்டு பிரசுரம் அடித்து ஒவ்வொரு வீட்டிற்கும் விநியோகம் செய்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார்.

இதையும் படிங்க:பெங்களூருக்கு கடத்தப்பட்ட 5 டன் ரேசன் அரிசி பறிமுதல்!

ABOUT THE AUTHOR

...view details