தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சூளகிரி புறவழிச் சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்த மக்கள்! - கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கிருஷ்ணகிரி: சூளகிரி அருகே புறவழிச்சாலை அமைக்க விவசாய நிலங்களைக் கையகப்படுத்துவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

பொதுமக்கள்
பொதுமக்கள்

By

Published : Aug 10, 2020, 10:46 PM IST

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரியிலிருந்து பேரிகைக்குப் புறவழிச்சாலை அமைக்கும் திட்டத்திற்காக, விவசாய நிலங்களைக் கையகப்படுத்தும் பணி மேற்கொள்ளப்படுகிறது. இதற்கு சூளகிரி அருகே உள்ள மருதேப்பள்ளி கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக மருதேபள்ளி கிராமத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர், வேப்பனஹள்ளி சட்டப்பேரவை உறுப்பினர் முருகன் தலைமையில், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

இதுகுறித்து சட்டப்பேரவை உறுப்பினர் முருகன் தெரிவிக்கையில், "சூளகிரியிலிருந்து பேரிகை வரையிலான புறவழிச்சாலை திட்டத்திற்காக விவசாய நிலங்களைக் கையகப்படுத்தினால், இப்பகுதியில் உள்ள விவசாய மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவர்.

அதனால் புறவழிச் சாலைக்காக விவசாய நிலங்களைக் கையகப்படுத்தும் திட்டத்தை மாவட்ட நிர்வாகம் கைவிட வேண்டும். ஏற்கனவே உள்ள சூளகிரி-பேரிகை இடையிலான சாலையை விரிவுபடுத்தும் திட்டத்தை மேற்கொள்ள வேண்டும்" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details