கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே காமன்தொட்டியைச் சேர்ந்தவர் விவசாயி ராஜப்பா. இவர் கடந்த இரு தினங்களுக்கு முன் ரேஷன் கடைக்கு சென்று வருவதாகக் கூறி விட்டு, வெளியே சென்றுள்ளார். ஆனால் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது மனைவி, சூளகிரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
ரேஷன் கடைக்கு சென்ற விவசாயி சடலமாக மீட்பு - போலீசார் விசாரணை - suspicious murder
கிருஷ்ணகிரி: ஓசூரில் மாயமான விவசாயி தென்பெண்ணை ஆற்றங்கரையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். அவர் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து ராஜப்பாவை தேடி வந்தனர். இந்நிலையில், தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் உள்ள முட்புதரில் உடல் அழுகிய நிலையில் ராஜப்பா சடலமாக கண்டெடுக்கப்பட்டார். அருகில் அவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் நின்று கொண்டிருந்தது.
ராஜப்பா முகத்தில் காயம் உள்ளதால் அவர் கொலை செய்யப்பட்டு ஆற்றில் வீசப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் ஏற்பட்டுள்ளது. சடலத்தை கைப்பற்றி ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த காவலர்கள், இது கொலையா? தற்கொலையா? என விசாரித்து வருகின்றனர்.