தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பள்ளிகள் திறப்பது எப்போது? - அமைச்சர் செங்கோட்டையன் பதில்! - கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கிருஷ்ணகிரி: நர்சரி, பிரைமரி பள்ளிகளுக்கு தொடர் அங்கீகார ஆணைகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வழங்கினார்.

பள்ளிகளுக்கு தொடர் அங்கீகார ஆணை வழங்கிய அமைச்சர்
பள்ளிகளுக்கு தொடர் அங்கீகார ஆணை வழங்கிய அமைச்சர்

By

Published : Dec 17, 2020, 10:53 PM IST

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நர்சரி, பிரைமரி பள்ளிகளுக்கு தொடர் அங்கீகார அணைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமை தாங்கினார்.

இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்துகொண்டு கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 232 நர்சரி, பிரைமரி பள்ளிகளுக்கு தொடர் அங்கீகார அணைகளை வழங்கினார். பின்னர் நிகழ்ச்சியின்போது அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது, "மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா கல்வித்துறையின் வளர்ச்சிக்காக எண்ணற்ற திட்டங்களை தொடங்கி வைத்தார்.

பள்ளிகளுக்கு தொடர் அங்கீகார ஆணை வழங்கிய அமைச்சர்

தற்போது அதை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் செய்துவருகிறார். பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோர், ஆசிரியர்கள் ஆகியோருடன் ஆலோசனை செய்த பிறகு முடிவு எடுக்கப்படும். தமிழ்நாட்டில் தொழில் தொடங்க பல்வேறு நிறுவனங்கள் வருகின்றனர்.

பிற மாநிலங்களுக்கு உதாரணமாக தமிழ்நாடு விளங்குகிறது. இதை பிரதமர் மோடியும் பாராட்டி உள்ளார்" என்றார்.

இதையும் படிங்க: ராயபுரத்தில் கரோனா பாதிப்பை கட்டுப்படுத்த புதிய திட்டம்!

ABOUT THE AUTHOR

...view details