கிருஷ்ணகிரி: சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று (ஜூலை. 26) மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆய்வு செய்தார்.
அதனைத் தொடர்ந்து பெட்டமுகிலாலம் கிராமத்திற்குச் சென்றார்.
அப்போது கரோனா தடுப்பு நடவடிக்கை, குழந்தைத் திருமணம் ஆகியவை குறித்து விழிப்புணர்வு நாடகங்கள் நடத்தப்பட்டன.
வனப்பகுதியில் நடந்து சென்று மக்களிடம் குறைகேட்பு பின்னர் மலைக் கிராமத்தில் அமைச்சர் நடந்து சென்று மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார். இதையடுத்து அவர் இரவு முழுவதும் அங்கேயே தங்கினார்.
தொடர்ந்து, அடர்ந்த வனப்பகுதி வழியாக அமைச்சர் நடைபயணம் மேற்கொண்டு தர்மபுரி மாவட்டம், பஞ்சப்பள்ளி என்ற இடத்திற்கு வந்தடைந்தார்.
இதையும் படிங்க:சென்னையில் விரைவில் கரோனா நினைவு பூங்கா!