கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த பாளேகுளி கிராமத்தைச் சேர்ந்த மாதேஸ் என்பவர், கிராமங்கள் தோரும் பாலை சேகரித்து தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்துள்ள தனியார் பால் நிறுவனத்துக்கு (ஆஹா பால் நிறுவனம்) நாள்தோறும் அனுப்புவது வழக்கம். கரோனா காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டு போக்குவரத்து தடை செய்யப்பட்டதால், 50 விழுக்காடு பால் வாங்குவதை நிறுவனங்கள் நிறுத்தியுள்ளன.
கொள்முதல் இல்லாததால் 2000 லிட்டர் பாலை குவாரியில் ஊற்றிய வியாபாரிகள் - பாலை குவாரியில் ஊற்றிய வியாபாரிகள்
கிருஷ்ணகிரி: போச்சம்பள்ளி அருகே கொள்முதல் செய்யப்படாத 2000 லிட்டர் பாலை தனியாருக்குச் சொந்தமான கல்குவாரியில் வியாபாரிகள் ஊற்றினர்.
![கொள்முதல் இல்லாததால் 2000 லிட்டர் பாலை குவாரியில் ஊற்றிய வியாபாரிகள் கொள்முதல் செய்யாத பால்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-8084463-thumbnail-3x2-milk.jpg)
இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மாதேஸ் என்பவர் 2000 லிட்டர் பாலை கொண்டுச் சென்றபோது, திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. இதனால் பாலை காவேரிப்பட்டிணத்தில் உள்ள தனியார் குளிர்சாதன அறையில் வைத்து பாதுகாத்துள்ளார். ஆனால், சரியான முறையில் குளிர்சானம் இயங்காததால் பால் கெடும் சூழல் ஏற்பட்டது. இதனால், இன்று பாலை எடுத்துக்கொண்டு காவேரிப்பட்டிணம், காரிமங்கலம், கிருஷ்ணகிரி என பல்வேறு பால் நிறுவனங்களிடம் மாதேஸ் அலைந்துள்ளார். ஆனால், பாலை கொள்முதல் செய்ய யாரும் முன்வராததால் வேறு வழியின்றி தனியார் கல்குவாரியில் 2000 லிட்டர் பாலை கொட்டியுள்ளார்.
இது குறித்து மாதேஸ் கூறியதாவது, "மூன்று நாட்கள்தான் பாலை குளிர்சான அறையில் வைத்து பாதுகாக்க முடியும். ஆனால் நான் வைத்த பால் முறையாக ஜில் ஆகாத காரணத்தால் கெடும் சூழல் ஏற்பட்டது. எந்த நிறுவனமும் கொள்முதல் செய்ய முன்வராத நிலையில், பாலை கொட்டி அழித்து வருகிறேன். இந்த பாலை பொது மக்களுக்கு இலவசமாக கூட ஊற்றியிருக்கலாம் என பலர் கேள்வி எழுப்பினர். பால் கெடும் சூழலில் இருந்ததால் பொது மக்களுக்கு வழங்கவில்லை" என்றார்.