தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாட்டில் பாலியல் வழக்குகள் பெருகுது! மார்க்சிஸ்ட் கம்யூ., குற்றச்சாட்டு - marxist communist party balakrishnan

கிருஷ்ணகிரி: பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் தமிழ்நாடு அரசு கூடுதல் கவனம் செலுத்தி அதை தடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கேட்டுக்கொண்டார்.

marxist communist party balakrishnan addressing press in krishnagiri, marxist communist party balakrishnan, தமிழகத்தில் பாலியல் வழக்குகள் பெருகுது
மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் பேட்டி

By

Published : Feb 6, 2020, 1:00 PM IST

இது தொடர்பாக கிருஷ்ணகிரியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறுகையில், தமிழ்நாட்டில் மாற்றுத்திறனாளி சிறுமிக்கு ஏற்பட்ட பாலியல் வன்கொடுமைக்கு உயர்நீதிமன்ற தீர்ப்பின் மூலம் தண்டனை கிடைத்துள்ளது.

இது போன்ற தண்டனைகள் கடுமையாக்க வேண்டும். ஒரு பக்கம் தண்டனைகள் வழங்கினாலும், மாநிலத்தில் ஏதேனும், ஒரு இடத்தில், பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் நடந்துக் கொண்டே தான் இருக்கிறது. தமிழ்நாடு அரசு தனிக் கவனம் செலுத்தி அதைத் தடுக்க வேண்டும்.

கிராம புற மக்களுக்கு வழங்கப்பட்டு வந்த சலுகைகள் குறைக்கப்பட்டு, பெரு நிறுவனங்கள் பயன்பெறும் வகையில் மத்திய நிதிநிலை அறிக்கையில் 61 ஆயிரம் கோடிச் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த அறிக்கையில் 2 லட்சம் கோடி மதிப்பிலான பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்ய திட்டமிட்டிருக்கிறது மத்திய அரசு.

மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் பேட்டி

தமிழ்நாட்டில் அனைத்துத் துறைகளிலும் வேலைவாய்ப்பு, லஞ்சம் ஊழல் என்று ஏதேனும் புகார்கள் வந்து கொண்டு தான் இருக்கிறது. உயர்நீதிமன்ற நேரடி பார்வையில் இது போன்ற துறைகளின் ஊழல்களை சிபிஐ விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது” என்று கூறினார்.

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details