தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

லாரி - கார் நேருக்கு நேர் மோதல்: ஒருவர் உடல் கருகி உயிரிழப்பு! - கிருஷ்ணகிரி கோர விபத்தில் ஒருவர் உடல் கருகி பலி

கிருஷ்ணகிரி: உத்தனப்பள்ளி அருகே லாரியும் காரும் நேருக்கு நேர் மோதியதால் ஏற்பட்ட தீ விபத்தில், காரிலிருந்த ஒருவர் உடல் கருகி உயிரிழந்தார்.

dharmapuri fire

By

Published : Nov 11, 2019, 10:57 PM IST

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரிலிருந்து ராயக்கோட்டை நோக்கிச் சென்ற தனியார் லாரியும், எதிரே வந்த காரும் உத்தனப்பள்ளி அருகே சானமாவு என்ற இடத்தில் மோதிக்கொண்டன.

இந்த விபத்தால் கார் தீப்பிடித்து எரிந்தது. இதனால் லாரி மீதும் தீ பரவியது. காரில் பயணம் செய்த ஒருவர் உள்ளேயே எரிந்து சாம்பலானார். மேலும் அதிலிருந்த பெண் ஒருவர் பயங்கர தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து நடந்த இடம்

காரும் லாரியும் முழுமையாக தீக்கிரையாகின. இந்த விபத்து குறித்து உத்தனப்பள்ளி காவல் துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் வாசிங்க: 'ஆம்பூர் ஸ்டார் பிரியாணி’ பெயரை பயன்படுத்த மற்ற உணவகங்களுக்குத் தடை!

ABOUT THE AUTHOR

...view details