தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'வெட்டுக்கிளிகளால் விவசாயிகளுக்கு பாதிப்பில்லை' - கிருஷ்ணகிரி மாவட்டச் செய்திகள்

எருக்கன் செடியின் இலைகளைத் தின்று தீர்த்த வெட்டுக்கிளிகளால் விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லை என கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

'locust will not trouble farmers says krishnagiri district officialsவிவசாயிகளுக்கு பாதிப்பில்லை' - கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம்
'வெட்டுக்கிளிகளால் விவசாயிகளுக்கு பாதிப்பில்லை' - கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம்

By

Published : May 30, 2020, 9:06 AM IST

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேரலகிரி என்ற கிராமத்தில் வெட்டுக்கிளிகள் எருக்கன் செடியில் மட்டும் காணப்படும் நூற்றுக்கணக்கான இலைகளை முழுவதுமாக வெட்டி தின்றுள்ளன.

வெட்டுக்கிளி

இது தொடர்பாக மாவட்ட நிர்வாக அலுவலர்கள், "கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி அடுத்த நேரலகிரி கிராமத்தில் உள்ள வெட்டுக்கிளிகளால் பயிர்களுக்கு பாதிப்பு ஏற்படாது.

எருக்கன் செடிகளில் மட்டும் இருக்கக்கூடிய இந்த வெட்டுக்கிளிகளை, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று வேளாண்மைத் துறையினர் நேரில் சென்று ஆய்வுசெய்து உரிய நடவடிக்கை எடுக்கின்றனர்" எனக் கூறினர்.

இருப்பினும் இக்கிராமத்தைச் சேர்ந்த ஒரு சில விழிப்புணர்வு விவசாயிகள், "இது சாதாரணமாக நம்மூரில் ஏற்கனவே அலைந்து திரியும் வெட்டுக்கிளிகள்தான் அதற்குத் தேவையில்லாமல் குறிப்பிட்ட சிலர் இது தொடர்பாகப் பீதியைக் கிளப்பிவருகின்றனர்" என்று தெரிவித்துள்ளனர்.

எருக்கன் செடியின் இலைகளைத் தின்று தீர்த்த வெட்டுக்கிளிகள்

இதையும் படிங்க:வெட்டுக்கிளிகளை அழிப்பதற்கு பதிலாக தீவனமாக மாற்றலாம் - சுற்றுச்சூழல் ஆய்வாளர் சுல்தான் இஸ்மாயில்

ABOUT THE AUTHOR

...view details