ஊரக உள்ளாட்சிகளில் டிச.27, 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நேற்றும், இன்றும் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. வாக்கு சீட்டு முறையில் நடத்தப்பட்ட இந்தத் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை எவ்வாறு நடைபெறும் என்பது குறித்த சில தகவல்களை இங்கே பார்க்கலாம்...
வாக்குகள் வகைப்படுத்தப்படும் முறை
தொடர்புடைய அலுவலர்களின் ஆணையின் படி, அரசியல் கட்சிகளின் முகவர்கள் முன்னிலையில் வாக்குச் சீட்டுகள் அடங்கிய வாக்குப்பெட்டிகள் சீல் திறக்கப்பட்டு, பதவி - வண்ணம் அடிப்படையில் வாக்குச் சீட்டுகள் வகைப்படுத்தப்படுகின்றன.
தரம் பிரிக்கப்பட்டு மீண்டும் பதவி - வண்ணம் அடிப்படையில், தனித்தனியாக அதே பெட்டிக்குள் போட்டு தொடர்புடைய பதவிக்கு எண்ணப்படும் அறைக்கு பெட்டிகள் எடுத்துச் செல்லப்படுகின்றன. அறைக்கு எடுத்துச்செல்லும் பணியாளர்களை அடையாளம் காண அவர்களுக்கு பதவி - வண்ண அடிப்படையில், ஐந்து வகையான வண்ணங்களில் சீறுடை அணிந்தவர்கள் வாக்குப் பெட்டிகளை தூக்கிச்செல்கின்றனர். வாக்குப்பெட்டி முழுதும் பச்சை வண்ணம், ஆதலால் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சீருடை மூலம் பணியாளர்களை அடையாளம் காணலாம்
தரம் பிரிக்கப்பட்ட வாக்குச்சீட்டுகளை உதாரணமாக, மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் என்றால், மஞ்சள் வண்ணம் உடுத்திய பணியாளர்கள் பெட்டியை கொண்டு சேர்க்கின்றனர். கிராம ஊராட்சித் தலைவர் என்றால் கிராம ஊராட்சி தலைவர் வாக்கு எண்ணும் அறைக்கு சிவப்பு வண்ணம் உடுத்திய பணியாளர்கள் பெட்டியை கொண்டு சேர்க்கின்றனர்.
அங்கு வாக்குச்சீட்டுகள் பிரித்தெடுக்கப்பட்டு 50 வாக்குச்சீட்டுகளாக அடுக்கப்படுகின்றன. பெட்டிக்குள் எடுக்கப்படும் பொழுது செல்லாத வாக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு, முகவர் முன்னிலையில் காண்பித்து வாக்குகள் குறிக்கப்பட்டு, 50 சீட்டுகளாக ரப்பர் கொண்டு கட்டப்படுகிறது.
வாக்குச்சீட்டும் அதன் பதவி வழி வண்ணங்களும்
கிராம ஊராட்சித் தலைவர் (Village Panchayat President) - இளஞ்சிவப்பு