கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அதிமுக கட்சியின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி, கிருஷ்ணகிரி மருத்துவக் கல்லூரிக்கு அடிக்கல் நாட்ட வருகைதரும் முதலமைச்சர் பழனிசாமியை வரவேற்பது குறித்து கழக செயல்வீரர்கள் வீராங்கனைகள் ஆலோசனைக் குழு கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் எம்பியுமான அசோக்குமார் தலைமை வகித்தார். மேலும் ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினர் மனோரஞ்தம் நாகராஜ், அதிமுக கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி, உள்ளிட்ட ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட அதிமுகவினர் பங்கேற்றனர்.