தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 27, 2019, 7:21 AM IST

ETV Bharat / state

உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்கும் முறையை தெரிந்து கொள்ளுங்கள்!

உள்ளாட்சித் தேர்தலில் மதிப்புமிக்க வாக்குச் சீட்டை எவ்வாறு செலுத்துவது, வாக்குச் சீட்டை மடித்து சரியான முறையில் செலுத்துவது தொடர்பான விரிவான தகவல்கள் அடங்கிய செய்தி தொகுப்பு...

VALUE VOTING, how to vote explained, tamilnadu local body election, உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்கும் முறை, வாக்குச் சீட்டை பயன்படுத்தும் முறை, தெரிந்து கொள்ளுங்கள்
how to vote explained

ஊராட்சி மன்றத் தேர்தலில் வாக்குச்சீட்டு முறையை பயன்படுத்தி எவ்வாறு வாக்களிப்பது என்பது குறித்து தேர்தல் அலுவலர் ஒருவர் பொதுமக்களுக்கு ஐந்து வகையான வாக்குச்சீட்டுகளைக் கொண்டு நமது ஈடிவி பாரத் பயனர்களுக்காக விளக்கிக் காட்டினார். மேலும் செல்லாத வாக்குகள் இல்லாமல் சரியாக எவ்வாறு வாக்கு செலுத்துவது, வாக்குச் சீட்டை எவ்வாறு மடிப்பது என்பன குறித்து விளக்கமளித்தார்.

என்னென்ன நிற வாக்குச் சீட்டுகள்...

மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் வேட்பாளருக்கு மஞ்சள் வண்ண வாக்குசீட்டும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் வாக்குச்சீட்டு பச்சை வண்ணம் எனவும், ஊராட்சி மன்றத் தலைவர் வாக்குச்சீட்டு பிங்க் வண்ணம், ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் வாக்குச்சீட்டு சிங்கிளாக இருந்தால் வெள்ளை வண்ணம் எனவும், இரண்டு வார்டாக இருந்தால் வெள்ளை, நீலம் என இரண்டு வண்ணங்களும் சேர்ந்து என ஐந்து வகையான வாக்குச்சீட்டுகள் பயன்படுத்தப்பட இருக்கின்றது.

யார் யாருக்கு, என்ன நிற வாக்குச் சீட்டுகள்

செல்லும் வாக்கு; செல்லாத வாக்கு...

வாக்குச் செலுத்த வரும் வாக்காளர்களிடம் சின்னங்கள் இடம்பெற்றுள்ள செல்லத்தக்க வாக்குச் சீட்டை வாக்குச்சீட்டு புத்தகத்திலிருந்து திருத்தி எடுத்துக் கொடுப்பார். அதில் ஒரு சீட்டை எடுத்துக்கொண்டு அதில் இடம்பெற்றுள்ள சின்னத்தில் தாம் விரும்பும் வேட்பாளர்களுக்கு வாக்காளர்கள் அச்சு முத்திரையை, வேட்பாளரின் சின்னத்தில் முழுவதுமாக பொறிக்க வேண்டும்.

20 ரூபாய் பத்திரத்தில் தேர்தல் வாக்குறுதிகளை எழுதி வாக்கு சேகரிப்பு

சின்னம் இடம்பெற்றுள்ள இடப்பக்கத்திலும் வலப்பக்கத்திலும் சிறிது இடம் இருக்கும். கீழ் பக்கத்திலும் மேல் பக்கத்திலும் பட்டை வரிவடிவத்தில் இரண்டு கட்டம் இடம் பெற்றிருக்கும். அந்த கட்டத்தில் படாதவாறு சின்னத்தை முழுவதுமாக அல்லது சின்னத்தின் இடப்பக்கம் அல்லது வலப்பக்கம் ஆகியவற்றில் முத்திரையை பதித்தால் மட்டுமே; அந்த வாக்கு செல்லத்தக்க வாக்காகக் கருதப்படும்.

நம் வாக்கு சரியானதாக இருக்க என்ன செய்ய வேண்டும்

மேலே உள்ள பட்டையிலும், கீழே உள்ள பட்டையிலும் ஏதேனும் ஒரு பகுதியில் தான் தவறுதலாக பட வாய்ப்புள்ளது. எனவே கீழே உள்ள பட்டை கோட்டில் மேல்பகுதியில் கால்பங்கு பட்டால், மேலே உள்ள வேட்பாளருக்கு வாக்களித்ததாக கணக்கில் கொள்ளப்படும். கால் பங்குக்கு மேல் பட்டை கோட்டில் மை பட்டுவிட்டால் அல்லது அச்சைப் மறைத்து விட்டால் அந்த வாக்கு செல்லாத வாக்காகக் கருதப்படும்.

கையில் கத்திரிக்காயுடன் வாக்கு சேகரிக்கும் பெண் வேட்பாளர்!

மேலே உள்ள பட்டையில், அதாவது சின்னத்திற்கு மேலே உள்ள பட்டையில் கால்பங்கு மை பட்டுவிட்டால் கீழே உள்ள சின்னத்திற்கு பொருத்தமான வேட்பாளருக்கு வாக்களித்ததாக கவனத்தில் கொள்ளப்படும். கால் பங்கு என்பதை தேர்வாணையம் முடிவு செய்யும் அல்லது மாவட்ட தேர்தல் அலுவலர் முடிவு செய்வார் அல்லது வாக்கு எண்ணிக்கை அலுவலர் முடிவு செய்வார்.

வாக்குச் சீட்டின் அளவு...

10 வேட்பாளர்களுக்கு மேல் போட்டியிடும் சின்னங்கள் பொறிக்கப்பட்ட தாளாக இருந்தால்; ஏ4 அளவு தாள் என நாம் உதாரணமாகக் கொள்ளலாம். இருப்பினும் வாக்குச்சீட்டு நாடுகளைப் பொறுத்த அளவில் தேர்தல் ஆணையத்தால் சென்டி மீட்டர் அளவுகளில் அழைக்கப்படுகிறது. எனவே உறுதியாக மேற்கண்ட அளவு தாள்கள் என நாம் உறுதி கூற இயலாது எனவே மேற்கண்டவாறு கற்பனை செய்துகொள்ளலாம் என்று குறிப்பிட்டார்.

உள்ளாட்சித் தேர்தல் - அமமுக வேட்பாளருக்கு அதிமுக வேட்பாளர் கொலை மிரட்டல்

பொதுவாக 10 வருடங்களுக்கு மேல் போட்டியிட்டால் ஒரு ஏ4 அளவு தாளில் இடப்பக்கமோ, வலப்பக்கமோ கூடுதலாக ஒரு தாளை இணைத்து அதில் வேட்பாளர்களின் சின்னங்களை அச்சிட்டு இருந்தால் எவ்வாறு இருக்கும் என்றவாறு நாம் கற்பனை செய்து கொள்ளலாம்.

வாக்குச்சீட்டு மடிக்கும் முறை

10 வேட்பாளர்கள் போட்டியிட்டால் ஒரு பள்ளி மாணவன் ஒரு ஏ4 அளவு தாளில் தேர்வு எழுதுவது போல், பத்து சின்னங்கள் அந்த தாளில் அடங்கியிருக்கும். அதில் பள்ளி மாணவன் தேர்வுகளை மடித்துக் கொடுப்பது போல் வலப் பக்கத்தில் இருந்து இடப்பக்கத்தில் மூடுவதாக இரண்டாக மடிக்க வேண்டும். பின்பு அந்த தாளை குறுக்காக மையப்பகுதியை ஒடித்து காணொலியில் குறிப்பிட்டிருப்பது போல் கீழிருந்து மேலாக மடிக்கப்பட வேண்டும். வாக்குச் சீட்டுகளை வாக்குப்பதிவு அலுவலர்கள் ஏற்கனவே மடித்து தான் கொடுப்பார்கள் அவர்களின் வழிகாட்டுதலின் பெயரில் நாமும் சரியாக வாக்களித்த பிறகு மடிக்கலாம்.

வாக்குச் சீட்டை எவ்வாறு மடிக்க வேண்டும்

பத்து வேட்பாளருக்கு மேலுள்ள சின்னம் அடங்கிய தாளில், அது சற்று அகலமாக இருப்பதால் இருபுறமும் காணொலியில் காட்டியுள்ளவாறு வேட்பாளர்களின் சின்னம் பொறிக்கப்பட்டிருக்கும். அந்தத் தாளின் மையப்பகுதியில் பட்டை வடிவமாக, அது இரண்டு பாகங்களாக பிரிக்கப்பட்டு இடப்பக்கம் பத்து சின்னங்களும், வலப்பக்கம் பத்து சின்னங்களும் என நாம் உதாரணமாகக் கொள்ளலாம்.

உள்ளாட்சித் தேர்தல்; கடைசி நாள் வாக்கு சேகரிப்பு - அரசியல் கட்சிகள் அனல் பறக்கும் பரப்புரை

பத்துக்கும் மேற்பட்ட சின்னங்கள் அடங்கிய ஒரு வாக்குச் சீட்டில், நாம் வாக்கு செலுத்தும் போது அதனை நாம் நான்காம் மடிக்கவேண்டும். முதன்முறையாக அது எவ்வாறு என்றால் இடப்பக்கம் வலப்பக்கம் என பிரிக்கப்பட்டு இருப்பதால் இடப்பக்கம் உள்ள சின்னத்தில் நாம் வாக்களிக்க விரும்பினால் தொடர்புடைய சின்னத்தில் நடுவில் சின்னத்தின் மேலே முழுவதுமாக வாக்கை செலுத்தி முத்திரைப் பதித்து விட்டு, ஏற்கனவே தேர்வு மாணவன் தனது விடைத்தாளை மடிப்பது போல் இடப்பாகத்தை காணொலியில் குறிப்பிட்டுள்ளது போல் பட்டை வடிவ கோடு வரை நாம் மடிக்கவேண்டும். தற்பொழுது வலப்பக்கத்தில் நாம் வாக்களிக்கப்பட்ட வேண்டாத வேட்பாளரின் சின்னம் இருந்தால் அதனை வெற்றி பகுதியாக விட்டுவிட்டு அதனையும் வலப் பக்கத்தில் இருந்து இடப்பக்கமாக மடிக்க வேண்டும்.

வாக்குகளை பயனுள்ள வாக்காக மாற்றுங்கள்!

தற்போது பத்துக்கும் அதிகமாக உள்ள சின்னம் அடங்கியதாக இருப்பதால் இது ஒரு ஏ4 அளவு தாள் போல் தோன்றும் எனவே இதனையும் பள்ளி மாணவன் மடிக்கும் அதாவது விடைத்தாளை மடிக்கும் தாள் போல் படிக்க வேண்டும் மடித்த பிறகு இதனையும் குறுக்காக மையப்பகுதியை ஒழித்து கீழிருந்து மேலாக மடித்து வாக்குப் பெட்டியில் செலுத்திவிட வேண்டும்.

மும்முரமாக நடைபெறும் உள்ளாட்சி தேர்தல் பணிகள்!

எவ்வாறு மடிக்க வேண்டும் வாக்குச் சீட்டை என்று வாக்குப் பதிவு அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வாக்குச்சீட்டுகள் சரியான முறையில் மடிக்கப்பட்டு வாக்கு செலுத்தாத சீட்டாக வாக்காளர்கள் கைகளில் கொடுக்கப்படும் எனது அதனை பின்பற்றி சரியான முறையில் வாக்காளர்கள் வாக்கை செலுத்தி அதன் பிறகு சரியான முறையில் மடித்து வாக்குப்பெட்டிகள் செலுத்தினால் ஒரு முழு வாக்கு செலுத்தியதாக அமையும் என்று தொடர்புடைய தேர்தல் பிரிவு வட்டார வளர்ச்சி அலுவலர் நம்மிடம் தெரிவித்தார்.

நம் வாக்கு சரியானதாக இருக்க என்ன செய்ய வேண்டும்

ABOUT THE AUTHOR

...view details