தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

எருது விடும் விழாவில் எக்காளமிட்டுச் சென்ற காளைகள் - கும்மனூர் மஞ்சு விரட்டு

கிருஷ்ணகிரி: கும்மனூரில் நடைபெற்ற எருது விடும் விழாவில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.

கும்மனூர் எருது விடும் திருவிழா
கும்மனூர் எருது விடும் திருவிழா

By

Published : Jan 28, 2020, 10:34 AM IST

கிருஷ்ணகிரி மாவட்டம், கும்மனூரில் ஆண்டுதோறும் எருது விடும் விழா நடைபெறுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு நடந்த எருது விடும் விழாவில் 300க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.

இந்த விழாவில் மருத்துவக்குழுவினரின் பரிசோதனைக்குப் பிறகே காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து எருது விடும் விழாவைக் காண ஏராளமனோர் வருகை தந்தனர். இந்தப் போட்டியில் நிர்ணயிக்கப்பட்ட பந்தய தூரத்தை குறைந்த நேரத்தில் கடக்கும் காளைகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

கும்மனூரில் நடைபெற்ற எருது விடும் திருவிழா

அதில் முதல் பரிசு 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள தங்க நாணயமும், இரண்டாம் பரிசு 40 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள தங்க நாணயமும், மூன்றாவது பரிசாக 30 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள தங்க நாணயமும் என 52 பரிசுகள் வழங்கப்பட்டன.

இதனையொட்டி ஏராளமான காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இதையும் படிங்க:

தமிழில் மட்டுமே குடமுழுக்கு நடத்தும்வரை ஓயமாட்டேன் - பெ மணியரசன்

ABOUT THE AUTHOR

...view details