தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் காங். வேட்பாளர் வேட்புமனு தாக்கல் - krishnagiri candidate sellakumar

கிருஷ்ணகிரி: மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் கிருஷ்ணகிரி தொகுதி வேட்பாளராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த செல்லகுமார் இன்று மாவட்டத் தேர்தல் அலுவலரிடம் மனு தாக்கல் செய்தார்.

CONGRESS CANDIATE

By

Published : Mar 25, 2019, 5:27 PM IST

திமுக தலைமையில் கூட்டணி வைத்துள்ள மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி தமிழ்நாட்டில் ஒன்பது இடங்களில் போட்டியிடுகிறது.இந்நிலையில், மதச்சார்பற்ற கூட்டணி சார்பில் கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள செல்லகுமார் இன்று மாவட்டத் தேர்தல் அலுவலரிடம் மனு தாக்கல் செய்தார்.

கிருஷ்ணகிரி வேட்பாளர் செல்லகுமார் மருத்துவப் படிப்பை முடித்துள்ளார். இந்திய காங்கிரஸ்பொதுச் செயலாளராகவும், கோவா மாநில காங்கிரசில்பொறுப்பாளராகவும் பணியாற்றிஇருக்கிறார். காங்கிரஸ் செயற்குழு உறுப்பினராக பொறுப்பு வகிக்கிறார்.

2014 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டபோது, கிருஷ்ணகிரி காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டு நான்காம் இடத்தைப் பெற்றார்.

ABOUT THE AUTHOR

...view details