கிருஷ்ணகிரியில் மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக்கோரி புதிய பேருந்து நிலையம் அண்ணா சிலை எதிரே நடைபெற்ற மனிதச்சங்கிலி போராட்டத்திற்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக மாவட்ட தலைவர் நூர்முகமது தலைமை வகித்தார்.
'அறவழிப் போரட்டத்தில் ஈடுபட்டவர்களைத் தாக்கி கலவரத்தை ஏற்படுத்திய குண்டர்களைக் கைது செய்க!' - undefined
கிருஷ்ணகிரி: குடியுரிமை பாதுகாப்பு இயக்கம் சார்பில் மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக்கோரி, மெழுகுவத்தி ஏந்தி மனிதச்சங்கிலி போராட்டம் நடத்தப்பட்டது.
திமுக நகரச் செயலாளர் எஸ்கே. நவாப், பரிதா நவாப், காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு தலைவர் முபாரக், பொருளாளர் அன்வர் பாஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிருஷ்ணகிரி பழையபேட்டை காந்தி சிலை பகுதியிலிருந்து புதுப்பேட்டை பெங்களுரு சாலை வழியாக அண்ணா சிலை வரை
இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் மெழுகுவர்த்தி ஏந்தி மனிதச்சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வகுமார், விசிக மாநில துணைத் தலைவர் கோவேந்தன், திமுக அஸ்லாம் ரகமத் செரீஃப் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகப் பங்கேற்று, தேசிய குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக்கோரி சிறப்புரையாற்றினர்.
TAGGED:
CAA PROTEST