தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கேஆர்பி அணையை தூர்வாரித் தரக்கோரி திமுக எம்எல்ஏ மனு! - KRB Dam

கிருஷ்ணகிரி : கேஆர்பி அணையை தூர்வாரித் தரக்கோரி கிருஷ்ணகிரி தொகுதி திமுக எம்எல்ஏ செங்குட்டுவன் மனு அளித்துள்ளார்.

திமுக எம்எல்ஏ செங்குட்டுவன்

By

Published : Apr 21, 2019, 9:48 PM IST

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள கேஆர்பி அணை 1952ஆம் ஆண்டு கட்டப்பட்டது. அதன் முழுக் கொள்ளளவு 52 அடிகளாகும். ஆனால் தற்போது இரண்டு அடி தண்ணீர் மட்டுமே இருக்கிறது. மேலும் 10-க்கும் கீழ் சேறும் சகதியுமாக இருக்கிறது. இந்நிலையில், கேஆர்பி அணையை தூர்வாரித் தரக்கோரி கிருஷ்ணகிரி சட்டப்பேரவை உறுப்பினர் செங்குட்டுவன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.

கேஆர்பி அணை

இது குறித்து அவர் பேசுகையில், 'திமுக ஆட்சியின்போது அணைகளை தூர்வாருவதற்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது. தற்போது நடைபெறும் ஆட்சியில் அணை பராமரிப்பில் போதிய கவனம் செலுத்தாத காரணத்தால் அணை பராமரிப்பு என்பது அறவே இல்லாமல் போனது. கேஆர்பி அணை கடைசியாக 1981ஆம் ஆண்டு மட்டுமே வறண்டு போனது, அதன் பின்னர் வறண்டு போன வரலாறு இல்லை.

திமுக எம்எல்ஏ செங்குட்டுவன் பேட்டி

தற்போது இந்த அணையின் வறட்சியால் கோடைகால விவசாயத்திற்கும், குடிப்பதற்கும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் அணையை தூர்வாரினால் மக்களுக்கும், விவசாயிகளுக்கும் பயன்படும் வகையில் அமையும். எனவே கேஆர்பி அணையை தூர்வாரித் தரும்படியும், அணையின் மதகுகளை சீர் செய்து தரும்படியும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளோம். விரைவில் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளனர்' எனக் கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details