கிருஷ்ணகிரி மாவட்டம சூளகிரி அருகே ஸ்ரீ டெக்ஸ்டைல்ஸ் என்ற தனியார் கார்மென்டஸ் தொழிற்சாலை உள்ளது. இதில் ஆண்கள், பெண்கள் என 1300 பேர் வேலை பார்த்து வந்தனர். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு திடீரென இந்தத் தொழிற்சாலை மூடப்பட்டது. இங்கு பணிபுரிந்த 1300 பேருக்கும் மூன்று மாத சம்பள பாக்கி இருந்துள்ளது.
சம்பள பாக்கியை வழங்க தொழிற்சாலையின் முன்பு போராட்டம் - சூளகிரி ஸ்ரீ டெக்ஸ்டைல்ஸ்
கிருஷ்ணகிரி: முன்னறிவிப்பு இல்லாமல் தொழிற்சாலை மூடியதால், சம்பள பாக்கியை வழங்குமாறு 300க்கும் மேற்பட்டவர்கள் தொழிற்சாலை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சம்பள பாக்கியை வழங்குமாறு 300க்கும் மேற்பட்டவர்கள் போராட்டம்
சம்பள பாக்கியை ஆறு மாதம் கழித்து வழங்குவதாக தொழிற்சாலை தரப்பில் கூறியுள்ளனர். அவர்கள் குறிப்பிட்ட ஆறு மாதகாலம் முடிந்த பின்பும் சம்பளம் தரவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில், சம்பள பாக்கியைத் தருமாறு 300க்கும் மேற்பட்டோர் தொழிற்சாலை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: சொந்த மாவட்டத்தில் மேயர் பதவியைப் பிடிக்க முதலமைச்சர் போட்ட 'ஸ்கெட்ச்'
TAGGED:
சூளகிரி ஸ்ரீ டெக்ஸ்டைல்ஸ்