தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கிருஷ்ணகிரி இளைஞர் கொலை வழக்கு: 3 பேர் நீதிமன்றத்தில் சரண்! - தமிழ் குற்ற செய்திகள்

கிருஷ்ணகிரி: நகரின் மையப்பகுதியில் இளைஞர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் ஓசூர் நீதிமன்றத்தில் மூன்று பேர் சரணடைந்துள்ளனர்.

Krishnagiri youth murder case: Three surrender in court
Krishnagiri youth murder case: Three surrender in court

By

Published : Aug 4, 2020, 5:01 PM IST

கிருஷ்ணகிரி நகரின் மையப் பகுதியில் நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 2) பவுன்ராஜ்(28) என்ற இளைஞர், அடையாள தெரியாத நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நகர காவல்துறையினர், இளைஞரின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், குற்றவாளிகளைத் தேடிவந்தனர். இந்நிலையில், இவ்வழக்கின் முக்கிய குற்றவாளியான வாஞ்சி(எ) சதீஷ் என்பவர் கிருஷ்ணகிரி நகர காவல்துறையினரால் நேற்று (ஆகஸ்ட் 3) கைது செய்யப்பட்டார்.

இவ்வழக்கில் தொடர்புடைய அகில் (எ) அகிலன்(24), ஜகா (எ) ஜகதீசன்(25), தர்சா (எ) டெண்டுல்கர்(19) ஆகிய மூவரும், ஓசூர் இரண்டாவது நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

ABOUT THE AUTHOR

...view details