கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில், உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்ட நபரை, அங்கிருந்த மருத்துவப் பணியாளர், 'சக்கர நாற்காலியை விட்டு இறங்குடா, நான் உன்னை தொடமாட்டேன்; உனக்கு என்ன வியாதி இருக்கும்னு எனக்கு தெரியாது’ என கூறி கீழே தள்ளிவிட்டார். இது தொடர்பான வீடியோ நேற்று (ஆகஸ்ட் 15) வெளியானவுடன், ஈடிவி பாரத் தமிழ்நாடு அது குறித்து செய்தி வெளியிட்டது.
ஈடிவி பாரத் செய்தி எதிரொலி: நோயாளியிடம் மனிதாபிமானமற்ற முறையில் செயல்பட்ட மருத்துவப் பணியாளர் இடைநீக்கம்! - krishnagiri wheel chair
கிருஷ்ணகிரி: அரசு மருத்துவமனையில், நோயாளியிடம் மனிதத்தன்மையற்ற முறையில் நடந்துகொண்ட மருத்துவப் பணியாளர் ஒருவர், ஈடிவி பாரத் செய்தி வெளியிட்ட இரண்டு மணி நேரத்தில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
![ஈடிவி பாரத் செய்தி எதிரொலி: நோயாளியிடம் மனிதாபிமானமற்ற முறையில் செயல்பட்ட மருத்துவப் பணியாளர் இடைநீக்கம்! கிருஷ்ணகிரி செ்யதிகள் கிருஷ்ணகிரி மருத்தவமனை krishnagiri wheel chair krishnagiri wheel chair incident](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-8443657-thumbnail-3x2-hos.jpg)
ஈடிவி பாரத் செய்தி எதிரொலி: நோயாளியிடம் மனிதத் தன்மையற்ற முறையில் செயல்பட்ட மருத்துவப் பணியாளர் இடைநீக்கம்
செய்தி வெளியான இரண்டு மணிநேரத்தில் மருத்துவமனை இணை இயக்குநர் பரமசிவன், நமது ஈடிவி பாரத் செய்தியாளரைத் தொடர்புகொண்டு மருத்துவப் பணியாளரை பணியிடை நீக்கம் செய்ததாக தெரிவித்தார். ஈடிவி பாரத் செய்தி எதிரொலியாக மருத்துவமனை எடுத்த முடிவுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது.
இதையும் படிங்க:நோயாளியை கீழே தள்ளிய மருத்துவப் பணியாளர் - நடவடிக்கை எடுக்குமா மாவட்ட நிர்வாகம்?
Last Updated : Aug 16, 2020, 9:51 PM IST