தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

50 ஆண்டுகால பழமையான சந்தை இடமாற்றம் - krishnagiri vegetable market place changed

கிருஷ்ணகிரி: 50 ஆண்டுக்கும் மேலாக செயல்பட்டுவந்த காய்கறி சந்தையை எந்தவித முன்னறிவிப்புமின்றி இடமாற்றம் செய்ததால் பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.

krishnagiri vegetable market place changed
krishnagiri vegetable market place changed

By

Published : Mar 28, 2020, 8:34 AM IST

கிருஷ்ணகிரியில் உள்ள கோ-ஆப்ரேட்டிவ் காலனி அருகே காய்கறி சந்தை 50 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கிவந்தது. இந்தச் சந்தைக்கு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சூளகிரி, ஓசூர், தேன்கனிக்கோட்டை, ராயக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து காய்கறிகளும், கீரை வகைகளும் கொண்டு வரப்படுகின்றன.

இதனை கிருஷ்ணகிரியைச் சுற்றியுள்ள பகுதி மக்கள் வாங்கிச் செல்கின்றனர். அதிகாலை 4 மணி முதல் காலை 9 மணிவரை இந்தச் சந்தையில் சுமார் ஒரு கோடி ரூபாய் வரை வர்த்தகம் நடைபெறுகிறது. இதனால் மக்கள் அதிக அளவில் கூடுகின்றனர். ஆனால், தற்போது கரோனா நோய்க் கிருமிப் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் 144 தடை உத்தரவு அமலில் உள்ளது.

50 ஆண்டுகால பழமையான சந்தையை முன்னறிவிப்பில்லாமல் இடமாற்றிய மாவட்ட நிர்வாகம்

இச்சூழலில் மக்கள் கூட்டம் கூடுவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்று முதல் சந்தை மூடப்படும் என்றும், அதற்கு பதிலாக சுமார் 8 ஏக்கரில் உள்ள அரசு ஆண்கள் மைதானத்திற்கு மாற்றும்படியும் உத்தரவிட்டிருந்தனர். அதன்படி இன்று அதிகாலை முதல் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் சந்தை அமைத்து வியாபாரிகள் வியாபாரம் செய்தனர்.

சந்தை மாற்றப்பட்டது குறித்து எந்த ஒரு தகவலும் தெரிவிக்காமல், திடீரென மாற்றப்பட்டதால் பொதுமக்கள் பொருட்கள் வாங்க அலைந்து திரிந்து வர வேண்டிய சூழல் ஏற்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details