தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கல்குவாரிக்குச் சென்ற மாணவன் மாயம்: மூன்று நாள்களுக்கு பிறகு சடலமாக மீட்பு

கிருஷ்ணகிரி: கல்குவாரிக்குச் சென்ற மாணவன் மாயமானதை அடுத்து மூன்று நாள்களுக்கு பிறகு காவல் துறையினர் சடலமாக மீட்டனர்.

மாணவன் சடலமாக மீட்பு
மாணவன் சடலமாக மீட்பு

By

Published : Mar 19, 2020, 5:27 PM IST

Updated : Mar 19, 2020, 6:37 PM IST

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூரை அடுத்த நாகம்பட்டியில் உள்ள தனியார் கல்குவாரியில் இன்று காலை அடையாளம் தெரியாத நபரின் உடல் மிதப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர் அங்கு சோதனை செய்து கல்லூரி அடையாள அட்டை ஒன்றை கண்டுபிடித்தனர்.

அதில் மத்தூரை அடுத்த கெட்டம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மாதேஸ், சசிகலா தம்பதியின் மகன் சஞ்சைகுமார் (18), என்பதும் அவர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்ததும் தெரியவந்தது. மேலும், கடந்த 16ஆம் தேதி பள்ளிக்குச் சென்ற மாணவன், வீடு திரும்பவில்லை என்று தெரிகிறது. பல இடங்களில் பெற்றோர் தேடி வந்த நிலையில், இன்று கல்குவாரியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மாணவன் சடலமாக மீட்பு

மாணவன் உயிரிழப்பு தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணையில், சஞ்சைகுமார் கடந்த திங்களன்று சக மாணவர்கள் நான்கு பேருடன் கல்குவாரி பகுதிக்கு குளிக்கச் சென்றுள்ளார். அப்போது நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கி மாணவன் உயிரிழந்ததாக சக மாணவர்கள் தெரிவித்துள்ளனர். உடற்கூறு பரிசோதனைக்கு பிறகே முழு விவரம் தெரிய வரும் எனக் காவல் துறையினர் தெரிவித்தனர்.

கடந்த ஆண்டு இதே கல்குவாரி குட்டையில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சகோதரர்கள் உயிரிழந்த நிலையில் மீண்டும் ஒரு உயிரிழப்பு நடந்துள்ளது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: பத்தாம் வகுப்பு மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

Last Updated : Mar 19, 2020, 6:37 PM IST

ABOUT THE AUTHOR

...view details