தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனாவிற்கு எதிராய் கருணைக் காட்ட கடவுளை அழைத்த காவலர்! - சீருடையில் அமர்ந்து உதவி ஆய்வாளர் பாடும் பாடல்

கிருஷ்ணகிரி: கரோனா நீங்க வேண்டும் என்று கோயிலில், சீருடையில் அமர்ந்து உதவி ஆய்வாளர் பாடும் பாடல் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

கரோனாவிற்கு எதிராய் கருணைக் காட்ட கடவுளை அழைத்த காவலர்: வைரல் வீடியோ!
கரோனாவிற்கு எதிராய் கருணைக் காட்ட கடவுளை அழைத்த காவலர்: வைரல் வீடியோ!

By

Published : Apr 6, 2020, 6:20 PM IST

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியை அடுத்த பாரூர் காவல்நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் வெங்கடாசலம். கடவுள் பக்தி மிகுந்த இவர், பணிச்சுமை தெரியாமல் இருப்பதற்கு பணி ஓய்வு நேரத்தில் இறைப்பாடல்கள் பாடுவது வழக்கம்.

கரோனா வைரஸ் தொற்று பரவல், தற்போது நாடு முழுவதும் வேகமாகப் பரவி வரும் நிலையில், கரோனா வைரஸ் தொற்று குறித்து தானே சுயமாக ஒரு பாட்டு எழுதி பண்ணந்தூர் சிவன் கோயிலில் காவலர் சீருடையிலேயே அமர்ந்து பாடியுள்ளார். இந்தப் பாட்டில் நாட்டிலிருந்து கரோனா விலகி மக்கள் தீட்சம் அடைய வேண்டும் என்று இறைவனிடம் உருகிப் பாடியுள்ளார்.

கரோனாவிற்கு எதிராய் கருணைக் காட்ட கடவுளை அழைத்த காவலர்!

இந்தப் பாடல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருவதோடு, மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் பெற்றுவருகிறது.

இதையும் படிங்க..சென்னை மருத்துவருக்குக் கரோனா தொற்று!

ABOUT THE AUTHOR

...view details