கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு, மக்கள் அத்தியாவசிய தேவைகளின்றி வீட்டைவிட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனை மீறி வெளியே சுற்றித்திரிவோர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தும், எச்சரித்தும் அனுப்பிவந்தனர். அந்த வகையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் தற்போது வரை மூன்றாயிரத்து 671 வழக்குகள் பதியப்பட்டும், இரண்டாயிரத்து 371 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டும் உள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கங்காதர் தெரிவித்தார்.