கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரையடுத்த ஒன்னல்பள்ளி கிராமத்தில் தனியார் கல்குவாரி ஒன்று அமைந்துள்ளது. ஏற்கனவே இங்கு கல்குவாரி அமைக்க அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தநிலையில், தற்போது அங்கு கற்களை உடைக்கும் இயந்திரத்திலிருந்து அதிகப்படியான புகை, தூசி வெளியேறுவதினால் எதிர்ப்பு வலுத்துள்ளது.
ஏனென்றால், அங்கிருந்து வெளியேறும் புகை, தூசியினால் அருகிலுள்ள பகுதிகள் முழுவதும் பனி சூழ்ந்தது போல் காட்சியளிக்கின்றது. மேலும் மக்கள் சுத்தமான காற்றை சுவாசிக்கமுடியாமலும் வீட்டைவிட்டு வெளியேற முடியாமலும் தவித்து வருகின்றனர்.