கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட கணிப்பாய்வு மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் திருமதி பீலா ராஜேஷ் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் உரையாற்றிய அவர்," தமிழ்நாட்டில் வரவுள்ள மழைக்காலங்களில் மக்களுக்கு அதிக பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்கு முன்னெச்செரிக்கை நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் 35 இடங்கள் மழையால் அதிக சேதத்திற்குள்ளாகும் என்று கருதப்படுகிறது. அவ்வாறு கருதப்படும் இடங்களில் பேரிடர் மேலாண்மைகுழுக்கள் தயார் நிலையில் இருக்கவும், 24 மணி நேரமும் கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பில் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் போதிய அளவுக்கு மருந்து மாத்திரைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. மேலும், டெங்கு பற்றிய விழிப்புணர்வை ஒவ்வொரு கிராமங்களுக்கும் சென்று ஏற்படுத்த வேண்டும்.