கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி பகுதியிலிருந்து கோயம்பேடு பூ மார்க்கெட்டிற்கு தினசரி பூக்களை ஏற்றுமதி செய்யும் ஒரு பெண்ணுக்கும், பெங்களூருவில் திருமணத்திற்குச் சென்று திரும்பிய ஒரு பெண்ணுக்கும், சளி மற்றும் காய்ச்சல் ஏற்பட்டதை அடுத்து, அவர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், வெளியான பரிசோதனை முடிவுகளில் இருவருக்கும் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, அவர்கள் இருவரும் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.