கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி ஒன்றியம், குருபரப்பள்ளி பகுதியானது, கிருஷ்ணகிரி - ஓசூர் தேசிய நெடுஞ்சாலை அருகே அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் தமிழ்நாடு அரசு சிப்காட் அமைக்க 250 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த விவசாயிகளுக்கு கடிதம் அனுப்பியுள்ளது. இதனால், அங்குள்ள குருபரப்பள்ளி, எண்ணே கொல்புதூர் உள்ளிட்ட ஆறு கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் ஒன்றிணைந்து குருபரப்பள்ளி தனியார் கம்பெனி அருகே உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து கிராம மக்கள் கூறுகையில், "அரசு கையகப்படுத்தும் 250 ஏக்கர் நிலத்தில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் கிணறு வெட்டி, ஆழ்துளைக்கிணறு அமைத்து மா, தென்னை, தேக்கு போன்ற மரங்களை வைத்து பயிரிட்டு விவசாயம் செய்து வருகிறோம். இந்நிலையில் வெளிநாட்டு கம்பெனிகளுக்கு நிலம் தேவைக்காக, எங்கள் வாழ்வு ஆதாரமான நிலங்களை கையகப்படுத்த அரசு சிப்காட் மூலமாக நடவடிக்கை எடுத்து வருகிறது.