கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள ஜிமங்கலம் கிராமத்தில் உள்ள நாகம்மாதேவி கோயிலில் கும்பாபிஷேக விழாவினை முன்னிட்டு கணபதி ஹோமத்துடன் வாஸ்து ஹோமம், நவக்கிரக ஹோமம், கோபுர கலச ஹோமம், பூர்ணாதி ஹோமம் உள்ளிட்ட ஹோமங்கள் நடைபெற்றன.
கிருஷ்ணகிரி நாகம்மாதேவி திருக்கோயில் கும்பாபிஷேகம் - Krishnagiri Nagammadevi Temple function
கிருஷ்ணகிரி: ஓசூர் அருகே உள்ள நாகம்மாதேவி திருக்கோவில் கும்பாபிஷேகமானது வெகு விமரிசையாக நடைபெற்றது.
![கிருஷ்ணகிரி நாகம்மாதேவி திருக்கோயில் கும்பாபிஷேகம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-5148420-thumbnail-3x2-ksg.jpg)
மங்கள வாத்தியம் முளங்க கோபுர கலசத்தில் கும்பாபிஷேகம்
மங்கள வாத்தியம் முழங்க கோபுர கலசத்தில் கும்பாபிஷேகம்
பின்னர் மங்கள வாத்தியம் முழங்க கோபுர கலசத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. மாலையில் நாகம்மாதேவிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இந்த கும்பாபிஷேக விழாவில் முன்னாள் கால்நடைத்துறை அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி, ஊர் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: 100 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ வீரமாகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்!